வகைப்படுத்தப்படாத

வெடிப்புச் சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவுக்கார சிறுவனும் உயிரிழப்பு

(UTV|COLOMBO) கொழும்பில் நேற்று முன்தினம் தேவாலயங்கள், மற்றும் 5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும் வெடிப்புச் சம்பவங்கள் நடந்த நிலையில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர் . 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.

இதில், பங்களாதேஷ் ஆளும் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் பஸ்லுல் கரீம் செலிம் என்பவரின் பேரன் ஜயான் சவுத்ரி (வயது 8) கொல்லப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

ஜயான் தனது தந்தை ஹேக் சவுத்ரியுடன் கொழும்பு நகரில் உள்ள ஆடம்பர ஓட்டலின் தரை தளத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தபொழுது வெடிப்புச் சம்பவம்  நடந்துள்ளது.

ஜயானின் ஜனாஸாஇன்றைய தினம்  டாக்கா நகருக்கு கொண்டு செல்லப்படும். இந்த தாக்குதல் சம்பவம் நடந்தபொழுது, அவனது இளைய சகோதரன் ஜோஹான் சவுத்ரி மற்றும் தாயார் ஷேக் அமீனா ஆகியோர் ஓட்டல் அறையில் இருந்துள்ளனர்.

செலிம், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினராவார். செலிமின் மருமகன் மஷியுல் இலங்கை மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது நிலைமை தொடர்ந்து மோசமடைந்த நிலையிலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

நாளை கொழும்பில் 18 மணி நேர நீர் விநியோகத் தடை

டெங்கு தொற்றால் பதுளை மாணவன் மரணம்

மலையக பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை