உலகம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நாடாளுமன்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது

(UTV |  கனடா) – வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கனடா நாடாளுமன்றம் பல மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

அந்நாட்டின் எல்லைப் பிரிவு உளவுப் பிரிவின் எச்சரிக்கைக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு வாகனங்களில் வெடிபொருட்கள் காணப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், பின்னர் ஒட்டாவா பொலிசார் நடத்திய விசாரணையில் அது பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என தெரியவந்தது.

Related posts

அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயம்

கொரோனாவால் 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கொரோனா தொற்று உலகில் 1 கோடியைத் தாண்டியது