சூடான செய்திகள் 1

வெசாக் தின நிகழ்வுகள் நிமித்தம் அதிகபட்ச பாதுகாப்பு

(UTV|COLOMBO) வெசாக் தின நிகழ்வுகள் காரணமாக தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து சில நாட்களுக்கு அமுல்படுத்தப்படும்.

கடந்த வருடத்தை போல இந்த வருடமும் வெசாக் தின நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

தென் மாகாண தேசிய அடையாள அட்டை அலுவலகம் திறப்பு

UPDATE: அக்கரைப்பற்றில் தீ பிடித்த படகு : தேடுதல் வேட்டை மும்முரம்