உள்நாடு

“வீட்டுக்கு வீடு செல்ல தயாராகும் நாமல்”

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மக்கள் மத்தியில் பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதன்படி, கிராமப்புற மக்களின் வீடு வீடாகச் சென்று கட்சி உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான முதற்கட்ட நடவடிக்கை தங்காலை தொகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் கூறியுள்ளார்.

தற்போது நாடாளுமன்றத்தில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக தமது கட்சி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் பலம் வாய்ந்த கட்சியாக அதனை தக்கவைக்க முழு அர்ப்பணிப்பை வழங்குவதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் 29 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்

கொவிட்-19 : மத்திய கிழக்கு நாடுகளில் 23 இலங்கையர்கள் பலி

இம்மாத இறுதியில் சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு