உள்நாடுபிராந்தியம்

வீட்டிற்கு அருகில் தோண்டப்பட்ட நீர் நிரப்பப்பட்ட குழியில் விழுந்து குழந்தை பலி

ஆராச்சிகட்டுவ, வைரம்கட்டுவ பகுதியில் வீட்டிற்கு அருகில் தோண்டப்பட்ட நீர் நிரப்பப்பட்ட குழியில் விழுந்து சிறு குழந்தையொன்று பரிதாபமாக பலியாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (06) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைரம்கட்டுவ பகுதியில் வசித்து வந்த 1 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு

பொலிஸ் மா அதிபர் பிரச்சினைக்கு தீர்வை கூறிய ஜனாதிபதி ரணில்.

நகர மண்டப வீதி பகுதிகளில் கடும் வாகன நெரிசல்