வகைப்படுத்தப்படாத

வீடுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை விரைவில் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளம். மண்சரிவு என்பனவற்றினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்ட வீடுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் இணைப்பு நடவடிக்கையுடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

டெங்கு ஒழிப்பு தொடர்பாகவும் இப்பிரதேசங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அனர்த்தம் நிகழ்ந்த பிரதேசங்களில் களுத்துறை மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Related posts

SC appoints Judge Bench to consider petitions against Pujith, Hemasiri

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மருத்துவமனையில் அனுமதி

சோமாலிய ஜனாதிபதி மாளிகை அருகே கார் குண்டுவெடிப்பு