கிசு கிசு

வீடுகளுக்காக மக்களின் மனங்களை மாற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் கருத்து

(UTVNEWS COLOMBO) அரசாங்கம் கட்டிக்கொடுக்கும் வீடுகளுக்காக மக்களின் மனங்களை மாற்றும் அரசியல்வாதிகள் நாட்டுக்கு எதற்கு? என கேட்கின்றேன். நாடு என்ற ரீதியில் நாம் பாரிய சிந்தனைமிகு நெடிக்கடிக்குள் சிக்கியுள்ளோம். என பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் வழங்கும் சலுகைகளினால் வாழும் மக்கள் பிரிவினர் உருவாக இடமளிக்க கூடாது என மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் கட்டிகொடுக்கும் 20 – 40 அடி வீடுகளில் வாழ்வதற்கு ஆசைபடுகின்றோம், அதேபோல் அவர்கள் வழங்கும் சலுகைகளை நம்பி நாம் வாழ்கின்றோம்.

எனவே, இவ்வாறான செயல்கள் மூலம் மக்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை நாட்டுக்கு சாபக் கேடாகவே கருத வேண்டும்.´ என்றார்.

Related posts

8 நிமிடங்களில் 110.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போன ஓவியம்

முதலையை விழுங்கிய பாம்பு…-(படங்கள்)

இலங்கையில் அலுகோசு பதவிக்கு அதிக விருப்பத்துடன் விண்ணப்பித்த அமெரிக்க பிரஜை