உள்நாடு

வீடு இல்லாத 18 எம்பிக்களுக்கு 1 கோடி நிதி!

(UTV | கொழும்பு) –

மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் வீடுகள் கிடைக்காத 18 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு கோடியே பதினாறு இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் பத்து உறுப்பினர்களுக்கு அறுபத்தேழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும், கடந்த ஆண்டு எட்டு உறுப்பினர்களுக்கு நாற்பத்தெட்டு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வீடு கிடைக்காத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் செலுத்தப்படும் தொகை 75000 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடப்பிரச்சினை காரணமாக எம்.பி.க்களுக்கு மதிவெல உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் வீடுகளை வழங்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாடாளுமற்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல உத்தியோகபூர்வ வீடமைப்புத் தொகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பம்!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு

மழை பெய்யக்கூடும் – இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

editor