உள்நாடு

விவசாய நிலங்களில் கால் பதித்த இராணுவம்

(UTV | மாத்தளை ) – மாத்தளை மாவட்டத்தில் உள்ள 23 கமநல சேவை நிலையங்களுக்கான 46 இராணுவ வீரர்களுக்கான பயிற்சி இன்று (18) ஆரம்பமானது.

நாலந்தா விவசாயப் பயிற்சி விதைப் பண்ணையில் விவசாயம் குறித்த ஐந்து நாள் பயிற்சித் திட்டத்தில் இந்தப் படையினர் பங்கேற்கவுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் பசுமை விவசாய நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக இராணுவத்தின் 111 ஆவது காலாட்படை படையணியின் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி நாலந்தா பண்ணையில் அரச விவசாயப் பயிற்றுவிப்பாளர்களுக்கான நடைமுறைப் பயிற்சி பிரிகேடியர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

விதை நெல் பயிரிடுதல், மரக்கறிச் செய்கை மற்றும் இதர பயிர்கள், பயிர்களில் பூச்சிகள் மற்றும் பிற நோய்களைக் கண்டறிதல், பயிர்களை இனங்காணல், அவற்றின் காலம் மற்றும் பயிர்களை அடையாளம் காணுதல் போன்ற தகவல்கள் இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என பிரிகேடியர் ரோஹித தெரிவித்திருந்தார்.

இலங்கை இராணுவத்தின் 2வது லயன்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த 46 வீரர்கள் நாலந்தா விவசாயப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறவுள்ளதாகவும், மாத்தளை மாவட்டத்தில் உள்ள கமநல சேவைகள் பிரிவு 23 இல் தலா இரண்டு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் முதன்முறையாக விவசாய நிலங்களில் இராணுவம் இறங்கி பசுமை விவசாயத் தொழிலை வழிநடத்தும் எனத் தெரிவித்திருந்தார்.

இராணுவத்தினரும் இந்நிகழ்விற்காக கடுமையாக உழைத்து வருவதாக விவசாய திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பயிற்சி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

மருத்துவ சபையில் பதிவு செய்ய இருக்கவேண்டிய தகைமை

கடந்த 24 மணித்தியால கொரோனா நோயாளர்களது விபரம்

மாணவ பிக்குகளுக்கு பாலியல் வன்கொடுமை பொலிஸில் முறைப்பாடு