உள்நாடு

வில்பத்து தேசிய பூங்காவில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஒருவர் கைது

வில்பத்து தேசிய பூங்காவில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற சந்தேக நபரொருவர் நேற்று வியாழக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம், நொச்சியாகம பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து கட்டுத்துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று வெள்ளிக்கிழமை (27) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ரயில் தடம்புரள்வு – கரையோர ரயில் சேவையில் தாமதம்

பாராளுமன்றத்தில் இன்று முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து

நீர் கட்டணம் செலுத்துவது குறித்து அவதானம்