உள்நாடு

விலையினை குறைக்க, முட்டை இறக்குமதி செய்யப்பட வேண்டும்

(UTV | கொழும்பு) – உள்நாட்டில் முட்டை விலையை குறைக்க உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக சில வியாபாரிகள் முட்டையை ரூ.70க்கு விற்பனை செய்வதால் முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இது தொடர்பில் தெரிவிக்கையில்; உள்ளூர் மாஃபியா காரணமாக பொதுமக்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

நியாயமற்ற விலை உயர்வை சமாளிக்க முட்டையை இறக்குமதி செய்ய ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தை வலுப்படுத்த அதிகாரிகள் விரும்பாததால் உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்கான எந்த பொறிமுறையும் இல்லை என அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Related posts

அம்பாறையில் கட்டுப்பணத்தை செலுத்திய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி

editor

கப்ராலுக்கு எதிரான பயணத்தடை மேலும் நீடிப்பு

“சுதந்திர தினத்தன்று ரஞ்சன் விடுதலையாவார்” – சஜித் [VIDEO]