வகைப்படுத்தப்படாத

விமானம் ஒன்றில் குண்டு இருப்பதாக அச்சமூட்டிய இலங்கையர் ஒருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – 300 பயணிகளுடன் ஒஸ்ட்ரேலியாவில் இருந்த மலேசியா நோக்கி பயணித்த விமானம் ஒன்றில் குண்டு இருப்பதாக அச்சமூட்டிய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெல்பேர்னில் வைத்து அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மிடம் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்து, விமானிகள் அறைக்குள் செல்ல முற்பட்ட போது, பயணிகளால் அவர் தடுக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவரிடம் மேற்கொண்ட சோதனையில், கைப்பேசிகளுக்கான மின்னேற்றியை வைத்தே அவர் குண்டு இருப்பதாக அச்சமூட்டியமை தெரியவந்தாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

[ot-video][/ot-video]

Related posts

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

Sri Lanka likely to receive light showers today

A/L Examination on Aug. 05