சூடான செய்திகள் 1

விபத்துக்குள்ளான எரிபொருள் தொடரூந்தில் இருந்து எரிபொருள் சேகரித்த நபர் கைது

(UTV|COLOMBO)-காட்டு யானை கூட்டம் ​மோதி விபத்துக்குள்ளான எரிபொருள் தொடரூந்தில் இருந்து எரிபொருள் சேகரித்த தொடரூந்து திணைக்கள ஊழியரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கெகிராவை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

ஹபரணை மற்றும் பளுகஸ்வெவ தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தின் போது பிரதேசவாசிகள் எரிபொருள் தாங்கிகளில் இருந்து கசிந்த எரிபொருளை​ சேகரிக்க தொடங்கிய நிலையில் , பின்னர் காவற்துறையின் தலையீட்டினை தொடர்ந்து அது தடுக்கப்பட்டது.

இந்த விபத்தில் தொடரூந்தின் இரு எண்ணெய் தாங்கிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தேசிய மீலாத் விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

தோல்விகளை வெற்றியை நோக்கி வழி நடத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்-ஜனாதிபதி

மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்…