உள்நாடு

விடுமுறை வழங்கப்பட்ட கண்டி பாடசாலைகள் தொடர்பில் வௌியான அறிவிப்பு

கண்டி சிறி தலதா வழிபாட்டு நிகழ்வை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்ட 24 பாடசாலைகள் நாளை (28) கல்விச் செயற்பாடுகளுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் செயலகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு வசதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஏனைய 37 பாடசாலைகள் நாளை மறுதினம் (29) மீண்டும் திறக்கப்படும் என்று பிரதம செயலாளர் செயலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் இதற்கு அனுமதி அளித்துள்ளதோடு, குறித்த பாடசாலைகளின் பட்டியலைக் கீழே காணலாம்.

Related posts

போதைப் பொருளுக்கு அடிமையான கிராம அலுவலர் கைது!

ரத்னஜீவன் ஹூல் உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பாணை

கொழும்பினை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல்