உள்நாடு

விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்கு செல்ல பணிப்பு

(UTV | கொழும்பு) – விடுமுறை பெற்று வீடுகளுக்குச் சென்றுள்ள, களனி பல்கலைக்கழகம், யக்கல விக்கிரமாராச்சி ஆயுர்வேத கல்லூரி மற்றும் நைவல உயர் கல்வி நிறுனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள், தங்களது வீடுகளிலேயே இருக்குமாறு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, மேற்படி கல்வி நிறுவனங்களை, இன்று(05) முதல் ஒருவார காலத்துக்கு மூடுவதற்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நேற்று(04) நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களையும் தங்களது வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

5 மாணவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி

editor

யக்கலமுல்ல பகுதியில் இருவர் கைது