வகைப்படுத்தப்படாத

விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு மரண தண்டனை

(UDHAYAM, COLOMBO) – விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு மொனராகலை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

நேற்று இவ்வாறு மரண தண்டனைக்கு உள்ளானவர், மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது.

2008 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி தனமல்வில காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட ஊவா குடாஓயா – அலிமங்கட பிரதேசத்தில் உப காவற்துறை பரிசோதகர் ஒருவர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்தமை மற்றும் இரவைகளை திருடியமை இவருக்கு எதிராக சட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆகும்.

சம்பவம் தொடர்பில் இதுவரை காலமும் விசாரணை செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், ஆயுற் காலை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது

Related posts

Three Avant-Garde suspects before Court today

சிரியாவில் வான் தாக்குதல்

කුසුම් පීරිස් මහත්මියගේ අවසන් කටයුතු අද