மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட விடத்தல்தீவு அலிகார் மஹா வித்தியாலயத்தின் வரலாறுகளை கொண்ட விடத்தல்தீவு அலிகார் வரலாற்று கருவூலங்கள் என்னும் தலைபைபிலான நுல் வெளியீட்டு விழா நேற்று (22) புத்தளம் தில்லையடி ஆர்.ஜே மண்டபத்தில் இடம்பெற்றது.
தினகரன் பத்திரிகையின் முன்னாள் இணை செய்தி ஆசிரியரும், சிரேஷ்ட எழுத்தளாருமான சுஜப்.எம்.காசிம் இந்த நூலை எழுதியிருந்தார்.
வடக்கில் பிரபாலமான பாடசாலையாக காணப்பட்ட அலிகார் பல்துறையாளர்களை உருவாக்கிய நிலையில் 90 களுக்கு முன்பும், அதற்கு பிற்பாடு வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்பும் விடத்தல்தீவு அலிகார் மஹா வித்தியாலயத்தின் பதிவுகளை மையமாகக் கொண்ட இந்த நூலினை சுஜப்.எம்.காசிம் எழுதியுள்ளார்.
மேற்படி வெளியீட்டு விழா தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பணிப்பாளரும்,கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலைய கணித பாட கருத்திட்ட உறுப்பினருமான எம்.ஏ.வாஹித் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் அதிதியாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்த குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதுடன், நூலினையும் வெளியிட்டு வைத்தார்.
இதேவேளை முன்னாள் நிதி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகமும், நூல் ஆக்க குழுவின் தலைவருமான ஏ .எம் .அமீன் வரேவேற்புரையினை நிகழ்த்த நூலாசிரியர் பற்றிய விளக்கத்தினை வவுனியா பல்கலைக்கழக ஆங்கில துறை தலைவர் விரிவுரையாளர் பேராசிரியர் ஞானசீலன் வழங்கினார்.
நுலாய்வினை ஐக்கிய நாடுகள் சபை முன்னாள் இலங்கைக்கான வதிவிட பிரதி நிதியும் ,சிறந்த இலக்கியவாதியுமான ஏ.எல்.எ.அசீஸ் நிகழ்த்தினார். சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி அமீர் பாயிஸ் உள்ளிட்ட பலரும் இதன் போது உரையாற்றினர்.
அலிகார் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவிகளினால் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டது.
மேலும், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மாணிக்கவாசகர் ஸ்ரீ ஸ்கந்த குமார் நூலாசிரியர் சுஜப்.எம்.காசிமுக்கு சினைவுச் சின்னம் ஒன்றினை வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
-இர்ஷாத் ரஹ்மதுல்லா, ரஸீன் ரஸ்மின், எம்.ஏ.ஏ.காசிம்