கேளிக்கை

விஜய்சேதுபதியை கைது செய்ய வேண்டும்…

(UTV|INDIA) நடிகர் விஜய்சேதுபதி நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் விஜய்சேதுபதியின் திருநங்கை நடிப்பை அனைவரும் பாராட்டினர். இந்த நிலையில் விஜய்சேதுபதிக்கு திருநங்கைகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும்  திருநங்கை ஒருவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் திருநங்கைகள் சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது. முழுக்க முட்டாள்தனமான, தவறான சித்தரிப்பாக விஜய் சேதுபதியின் ஷில்பா கதாபாத்திரம் அமைந்துள்ளது. இது வெட்கக்கேடானது அதேநேரத்தில் அதிர்ச்சிகரமானது. நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதியை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம், அவரை கைது செய்ய வேண்டும்” என்றார்.

இந்த நிலையில் ‘தாதா 87’ என்ற திருநங்கை படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இதுகுறித்து கூறியபோது, ‘விஐய்சேதுபதி மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் என் மீது நடவடிக்கை எடுங்கள். நானும் திருநங்கைகள் பற்றி படம் எடுத்து விட்டேன்’ என்று கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

அந்த ஹீரோவால் தான் இங்க இருக்கேன் – ரியோ [PHOTO]

ஸ்ரீதேவி நடித்த கடைசி படம் வெளியானது

‘விஜய் 62’ இயக்குநர் இவர்தான்