கேளிக்கை

விஜய்க்கு பயந்து தள்ளிபோகும் சூர்யா

(UTV|இந்தியா) – சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் வெளியீடும் திகதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி மேலும் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை ஏப்ரல் 9 ஆம் திகதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதே திகதியில் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாவதால், தியேட்டர் பங்கீட்டில் சிக்கல் ஏற்படும் என்பதற்காக சூரரைப் போற்று படத்தின் வெளியிடும் திகதியை படக்குழு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படத்தை மே 1 ஆம் திகதி உழைப்பாளர் தினத்தன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் தனுஷின் ஜகமே தந்திரம், விஷாலின் சக்ரா, ஜெயம் ரவியின் பூமி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மதுவில் சிக்கிய மாது

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்டம்

சன்னிலியோனின் அடுத்த அதிரடி!