உள்நாடு

விசேட சோதனை நடவடிக்கையில் 1,120 பேர் கைது

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,120 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(28) காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு இடையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 47 பேரும், நீதிமன்றதை புறக்கணித்து வந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 418 பேரும் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 549 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

இவ்வருடம் அரிசி இறக்குமதி இல்லை!

ப்ரான்ஸில் குர்ஆன் அவமதிப்பால் சர்ச்சை : உலமா சபை கண்டனம்

அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்தனர்