உலகம்

விசாகப்பட்டினத்தில் வாயுக்கசிவு – 8 பேர் உயிரிழப்பு

(UTV|இந்தியா) – இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாயுக்கசிவு காற்றில் வேகமாக பரவியதையடுத்து, ஆலையை சுற்றி 3 கிமீ சுற்றளவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாயுக் கசிவினால் இரசாயனத் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள 3 கிலோ மீற்றர் பரப்பளவில் வசிக்கும் 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

கொரோனா வைரஸ் 2 வருடங்களில் முடிவுக்கு வரலாம்

கனடாவின் புதிய பி்ரதமராக மார்க் கார்னி!

editor

மாஸ்க் அணிவதும் அணியாததும் தனிநபர் விருப்பம்