வகைப்படுத்தப்படாத

வான் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 60 பேர் பலி

(UTV|AMERICA)-சோமாலியாவின் மத்திய பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் சுமார் 60 அல் ஹபாப் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்படவோ காயமடையவோ இல்லை எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

அல் ஷபாப் கிளர்ச்சியாளர்களைத் தாக்கும் சோமாலிய படையினருடனான கூட்டு முயற்சியின் ஒரு பகுதி தான் இந்தத் தாக்குதல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் 100 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதன் பின்னரான மோசமான தாக்குதல் இதுவாகும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அல் கைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஹபாப் அமைப்பு, இது குறித்து கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

சுனாமி – சூறாவளி வதந்நிகளே – இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியஷர்சன யாப்பா

මෙරටට පැමිණෙන චීන සංචාරකයින් සඳහා පහසුකම් ලබාදීමේ වැඩපිළිවෙලක්

Navy arrests 3 persons with ammunition