அரசியல்உள்நாடு

வாக்களிப்பு நிலையத்தில் படம், காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடத் தடை

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியிடுதல் தேர்தல் சட்டத்தை மீறும் செயல்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஆகையால், அத்தகைய செயல்களைத் தவிர்க்குமாறு அனைத்து சமூக ஊடக வலைதள கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கும் அவற்றின் நிர்வாகிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

Related posts

இன்றும் மூன்று மணி நேர மின்வெட்டு

A/L பரீட்சை இன்று ஆரம்பம்- 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்

மிகை கட்டண வரி சட்டமூலம் : SJB மனு