உள்நாடு

வாக்களர் அட்டைகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று முதல்

(UTV | கொழும்பு) – எதிரவரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்களர் அட்டைகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று(11) முதல் முன்னெடுக்கப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்றும் நாளையும் மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களுக்கு உத்தியோகப்பூர்வ வாக்களர் அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதித் தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளர்

மாவட்ட செயலகங்கள் ஊடாக குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் வாக்களர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் அருகில் உள்ள தபாலகங்களில் தங்களுக்குரிய வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்வு

ஐ. தே.க தொகுதி அமைப்பாளர்கள் – சஜித் இடையே சந்திப்பு

பேராதனை போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் மீண்டும் வழமைக்கு