உள்நாடு

வாகனம் நிறுத்துவது குறித்து இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – பயணிகள் நடைபாதை மற்றும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பிலான சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று(17) முதல் இந்த சட்டவிரோத செயற்பாடுகளை கண்காணிக்க பொலிஸார் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், இந்த வீதி சட்ட ஒழுங்கினை மீறும் சாரதிகள் மீது 50,000 ரூபா வரை தண்டப்பணம் விதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் பொலிஸ் திணைக்களத்தின் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

கப்பலில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் பலி

மறு அறிவித்தல் வரை ஓட்டுனர், நடத்துனர் விடுமுறை இரத்து

இன்றைய தினம் மேலும் பலருக்கு கொவிட் உறுதி