சூடான செய்திகள் 1

வாகன விபத்தில் இருவர் பலி…

வௌ்ளங்குளம் பகுதியிலிருந்து, மல்லாவி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், வௌ்ளங்குளம் நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனமும் நேருக்கு ​நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர் என, மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய, கெப் வண்டிச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

காமினி செனரத்தின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

கொழும்பில் முதன்முறையாக வீதி கடவைகளுக்கு சூரிய மின்ஒளி கட்டமைப்பு

அலுக்கோசு பதவிக்கு செயன்முறை பயிற்சி?