உள்நாடு

வாகன புகையை கண்டால் வாட்ஸாப்ப் பண்ணுங்க !

(UTV | கொழும்பு) –  அதிக வாகனப்புகையை வெளியிடும் வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதற்காக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் காற்று மாசு அடைவதற்கு வாகன புகையே மிக முக்கிய காரணம் எனவும் அதனை குறைப்பதற்காகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இதனை குறைக்க வாகனங்களை ஓட்டும் போது வெளிப்படும் புகையினை அளவிடும் முறைமையொன்று தயாரிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

‘கொழும்பு மாவட்டத்தில் அதிகளவு காற்று மாசுபாடு நிலவுகிறது. வாகனங்கள் வெளியிடும் புகை இதற்கு 60 முதல் 70 சதவீதம் வரை பங்களிக்கிறது. வீதியில் அதிகளவான புகையை வெளியேற்றும் வாகனம் இருந்தால், பொதுமக்கள் அதன் புகைப்படத்தை எங்களுக்கு வாட்ஸ்அப் (whatsapp) செய்யலாம்.

மேலும், இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் ஒன்றிணைத்து வாட்ஸ்அப் குரூப் உருவாக்குகிறோம். இதன் ஊடாக வீதியில் பயணிக்கும் எந்தவொரு வாகனத்தின் இலக்கத்தகடு மாத்திரம் போதும். தடை உத்தரவினை பெற்று அது போன்ற வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். ‘என தெரிவித்தார்.

மேலும் . எதிர்காலத்தில், விசாரணை நடவடிக்கைகளையும் மேம்படுத்தாவும் திட்டமிட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சபாநாயகரை சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

editor

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபம் திறைசேரிக்கு!

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!