வணிகம்

வாகன இறக்குமதியில் வீழ்ச்சி

(UTV|COLOMBO) வாகன இறக்குமதி மற்றும் விற்பனை நடவடிக்கைகள் துரிதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில், அரசாங்கத்தால் பல சந்தர்ப்பங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு நிலைமைகளாலேயே, வாகன இறக்குமதி 90% வீழ்ச்சியடைந்துள்ளதுடன் வாகன விற்பனை 70% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதென குறித்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாகன விற்பனைக்கான சந்தையின் நிலையற்ற த​ன்மையால் வாகன விற்பனை வெகுவாகப் பாதித்துள்ளதாகவும், இந்நிலையைக் குறைப்பதற்கு எதிர்வரும் வரவு செலவு திட்டத்திலாவது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

லங்கா சதொச நிறுவனத்தின் 406 வது கிளை திறப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

55 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை