உள்நாடுபிராந்தியம்

வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு – நோயாளர்கள் அவதி

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (10) அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது.

இதற்கு நீதி கோரி நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (12) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்தே குறித்த பணி பணிப்புறக்கணிப்பானது வவுனியா வைத்தியசாலையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன், வீடு திரும்பியிருந்தனர்.

Related posts

மேலும் 23 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்ய விரும்பவில்லை – கீதா குமாரசிங்க

editor

ரணில் – அனுர டீல் வலுவானதாக காணப்படுகிறது – விமல் வீரவன்ச

editor