சூடான செய்திகள் 1

வவுனியா சிறையில் இருந்து சிறைக்கைதி தப்பியோட்டம்

வவுனியா சிறையில் இருந்து சிறைக்கைதி ஒருவர் நேற்று மாலை 2 மணியளவில் தப்பியோடியுள்ளார்.

குறித்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பை சேர்ந்த வீரசிங்கம் முதியன்சலாகே பியந்தஅப்புகாமி என்ற நபர் உட்பட பலர் சிறைச்சாலையை சுற்றி சுத்தப்படுத்தி கொண்டிருந்த போது தப்பித்து சென்றுள்ளார்.

வேலைசெய்த இடத்திலிருந்து கைதி பலமணிநேரமாக திரும்பாததால் சிறைக்காவலர் சென்று பார்த்தபோது கைதி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. தப்பிச் சென்ற இக்கைதியைத் தேடி வவுனியா சிறைக்காவலர்கள் வவுனியா பொலிசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் தப்பிச் சென்ற கைதியை தேடி கண்டு பிடித்து சிறைச்சாலைக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கடலில் குளிக்க சென்ற இளைஞரை காணவில்லை

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

editor

ஊரடங்கு சட்டம் பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ளது