உள்நாடு

வவுனியா சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

(UTV | கொழும்பு) –வவுனியா சாலை ஊழியர்கள் சுகாதார பிரச்சனையினை முன்வைத்து இன்று 24 முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பினை முடிவுக்கு வந்துள்ளது.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதை அடுத்து  அதிரடியாக விரைந்து செயற்பட்ட சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பினை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக பேரூந்துகள் அனைத்தும் தண்ணீரினால் கழுவிய பின்னர் தொற்று நீக்கும் மருந்துகள் தெளித்து அதன் பின்னரே சேவையில் ஈடுபடுகின்றன.

வவுனியா சாலையிலுள்ள பேருந்துகள்  தொற்று நீக்காமையினால் தாம் சேவையில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பேரூந்துகள் தொற்று நீக்கும் மருந்துகள் தெளித்து சுத்தப்படுத்தியதன் பின்னர் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

Related posts

நாடளாவிய திரையரங்குகள் 2ஆம் திகதி திறக்கப்படும்

இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு புதிய தலைவர்

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம்