வகைப்படுத்தப்படாத

வழமை நிலைக்குத் திரும்பும் கேரளா…

(UTV|INDIA)-இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை குறைவடைந்து வருவதால், குறித்த பகுதிக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 370 பேர் வரை பலியாகியுள்ள நிலையில், சுமார் 30,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டு காணாத பாரிய வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் கேரளா மாநிலம் முழுவதும் சுமார் 20,000 கோடி ரூபா அளவிற்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கத்தார் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கேரள மாநிலத்துக்கு முதல் கட்ட நிதியாக வழங்கவுள்ளதாக நேற்று 919) அறிவித்தது.

தமிழக அரசின் சார்பில் 10 கோடி, டில்லி அரசின் சார்பில் 10 கோடி ரூபா, தெலுங்கானா அரசின் சார்பில் 25 கோடி ரூபா, பீஹார் அரசின் சார்பில் 10 கோடி ரூபா, அரியானா அரசின் சார்பாக 10 கோடி ரூபா, மகாராஷ்டிரா அரசின் சார்பாக சார்பில் 20 கோடி ரூபா, குஜராத் அரசின் சார்பாக 10 கோடி ரூபா, உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பாக 15 கோடி ரூபா, பஞ்சாப் அரசின் சார்பில் 10 கோடி ரூபா, ஜார்க்கண்ட் அரசு சார்பில் 5 கோடி ரூபா, மத்தியப்பிரதேசம் அரசின் சார்பில் 10 கோடி ரூபா என நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மூன்று மாவட்டங்களில் இன்று மின் விநியோகம் தடை

ஜெயலலிதா வீட்டில் கொலை!..ஒருவர் படுகாயம்…பெரும் பரபரப்பு

වෛද්‍ය සාෆිට එරෙහිව අධිකරණයට මෝසමක්