உள்நாடு

வறட்சியில் பாதிக்கப்பட்ட லக்சபான!  

(UTV | கொழும்பு) –

குறிப்பாக கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பமான காலநிலை தோன்றியுள்ளது.
இதன் காரணமாக மலையக பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.குறிப்பாக மவுசாகல, காசல்ரீ, மேல் கொத்மலை, கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, விமலசுரேந்திர, கலுகல ஆகிய நீர் மின் நிலைய பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.மேலும் பிரதான நீரை சேமித்து வைக்கும் மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 43 அடி குறைந்த நிலையில் உள்ளது என லக்க்ஷபான நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் கடந்த ஆண்டு முதல் இன்று வரை மிக குறைந்த அளவில் இப் பகுதியில் மழை பெய்தமையால் சொற்ப நீரையே சேமித்து வைக்க முடிந்தது.தொடர்ந்து மத்திய மலைநாட்டில் மழை பெய்யா விடின் மின் உற்பத்தி தடை படும் எனவும் நாட்டு மக்கள் மின்சார பாவனையை குறைக்கும் படி கேட்டுக் கொண்டார்.அத்துடன் மலையக பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீர் பெற்று கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

காய்கறிகள் வாங்கும் நுகர்வோர் எண்ணிக்கையில் சரிவு

நாட்டை மீட்டெடுத்ததாக ரணில் அபாண்டப் பொய் சொல்கின்றார் – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor