சூடான செய்திகள் 1

வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

(UTVNEWS|COLOMBO) – மாதம்பே, சுதுவெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், தீயினால் தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுக்கு இல்லங்கள்-ஜனாதிபதி

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு மிக முக்கிய அறிவித்தல்

பிரதமரை சந்தித்த விஜயகலா மகேஸ்வரன்