உள்நாடுவணிகம்

வர்த்தக நிலையங்கள் மற்றும் சிற்றூண்டிச்சாலைகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பம்

(UTV|கொழும்பு) – மனித நுகர்வுக்குப் பொறுத்தமற்ற உணவுப் பொருட்களை விநியோகிக்கும் வர்த்தக நிலையங்கள் மற்றும் சிற்றூண்டிச்சாலைகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் உள்ள சுகாதார பரிசோதகர்களினால் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுகர்வுக்குப் பொருத்தமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே, இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

திரிபோசா வழங்குவதில் சிக்கல்

பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்தார் புதிய பாதுகாப்பு செயலாளர்

editor

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவு