உள்நாடுவணிகம்

வரி செலுத்துவோருக்கு விசேட சலுகை

(UTVNEWS | கொழும்பு) – வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக உள்நாட்டு வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மார்ச் 20 ஆம் தகதிக்குள் வெட் வரியை செலுத்த வேண்டும் என்றும் ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் மார்ச் 20 ஆம் திகதிக்கு பதிலாக ஏப்ரல் 30 ஆம் திகதி வரை கட்டணம் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் குருகே தெரிவித்துள்ளார்.

மேலும் வரி செலுத்துவோர் வங்கிகளுக்கு செல்லாது வீட்டிலிருந்தே ஒன் லைன் மூலம் தனது வங்கி கணக்கிலிருந்து பணத்தை உள்நாட்டு வருமான வரி திணைக்களத்திற்கு மாற்ற முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

செலிங்கோ காப்புறுதி ஊடாக பணியாளர்களுக்கு காப்புறுதிகள்

ராஜிதவின் பிணை மனு விசாரணை; நீதவான் நீதிமன்றில்

ரஞ்சனிடமிருந்து மீட்கப்பட்ட ஒலி நாடா தொடர்பில் உடனடி விவாதம் தேவை