உள்நாடுசூடான செய்திகள் 1

வரவு-செலவுத்திட்டத்தை வெல்ல வைக்க பசில் மும்முரம்- சனிக்கிழமை நாடு திரும்புகிறார்

(UTV | கொழும்பு) –

வரவு செலவுதிட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளார்.

சமீபத்தைய அரசியல் நெருக்கடியை தொடர்ந்து பதவி விலகிய – செப்டம்பரில் அமெரிக்க சென்ற பசில் ராஜபக்ச சனிக்கிழமை மீண்டும் நாடு திரும்பவுள்ளார் அவர் வரவு செலவுதிட்டத்திற்கு மூன்றில் இரண்டுபெரும்பான்மையை பெற்றுக்கொடுப்பது குறித்த முயற்சிகளை ஆரம்பிப்பார்.

அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ள பசில் ராஜபக்ச சனிக்கிழமை நாட்டை வந்தடைவார் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை மீள கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் வரவு செலவுதிட்டத்திற்கான ஆதரவை பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதே அவரது உடனடி நடவடிக்கையாக காணப்படும்.

வரவு செலவு திட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே அரசாங்கத்தின் நோக்கமாக காணப்படுகின்றது இதன் மூலம் அடுத்த வருடம் பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை நெருக்கடி இன்றி செயற்படலாம் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.(S)

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

‘தம்மிக பானம்’ : விசாரணைகள் ஆரம்பம்

நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு பதவி விலக வேண்டும்