உள்நாடு

வரவு செலவுத் திட்டம் 2023 : சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, வரவு செலவுத் திட்ட உரை முடியும் வரை அமுலில் இருக்கும் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

சபாநாயகரின் அறிவிப்பின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள் உட்பட முழு நாடாளுமன்ற கட்டிடமும் ஏற்கனவே பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் பாராளுமன்ற காட்சியகங்கள் தூதரகப் பிரிவினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன நிறுத்துமிடமும் இன்று மூடப்படும்.

இன்று பிற்பகல் போக்குவரத்து பொலிஸாராலும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களாலும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்படும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு தமது ஆதரவை வழங்குமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

பேரூந்து சங்கங்கள் சிவப்பு எச்சரிக்கை

கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு