உள்நாடு

வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்

(UTV | கொழும்பு) – 2021ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு, 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதன்படி 2021ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாத நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரையில் நடைபெறும்.

அதன் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10ம் திகதி நடைபெறும்.

Related posts

பொருளாதாரத்தை உயர்த்துவதில் இரவுநேர பொழுதுபோக்குகள் முக்கிய பங்கு – டயானா கமகே

மாற்றங்கள் நிறைந்த புதிய பாதைகளை திறந்து விடும் ஆண்டாக மலரவேண்டும் – சிறீதரன் எம்.பி

editor

மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு