சூடான செய்திகள் 1

வத்தளையில் தமிழ் மொழிமூல பாடசாலை அமைக்க அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO)-அருண் மாணிக்க வாசகம் இந்து வித்தியாலம் என்ற பெயரில் தமிழ் மொழி இந்து இன மக்களுக்காக பாசாலையொன்ற களனி கல்வி வலயத்தில் அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பிரதேசத்தில் வாழும் தமிழ் மொழியில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தவதற்காக தமிழ் மொழி மூல பாடசாலை ஒன்று அமைக்கப்பட உள்ளது.

அருண் பிரசாத் அமைப்பினால் கல்வி அமைச்சிடம் பரிசு உறுதிபத்திரத்தின் மூலம் வழங்குவதற்கு உள்ள சொத்தை பயன்படுத்தி இந்தப் பாடசாலை அமைக்கப்பட உள்ளது.

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழி, சமூக மேம்பாடு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்

இம்மாத இறுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

பிறந்து சில நாட்களே ஆன சிசுவிற்கு தாய் செய்த காரியம்…