சூடான செய்திகள் 1

வத்தளை விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

(UTV|COLOMBO) நேற்று பகல் கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் ஒலியமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

58 வயதுடைய ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் ஜீப் வண்டியின் கதவு திறக்கப்பட்டதையடுத்து பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் சென்றவர் கதவில் மோதி விழுந்துள்ள போது அதே வீதியில் பயணித்த மற்றொரு கெப் வண்டிக்கு அடிப்பட்டு அந்த நபர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி மற்றும் பின்பக்க ஆசனத்தில் இருந்து கதவை திறந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் கெப் வண்டியின் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று ஆரம்பம்

மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

கெப் வாகனம் கவிழ்ந்ததில் நபர் ஒருவர் பலி