சூடான செய்திகள் 1

வத்தளை துப்பாக்கிச்சூடு சம்பவம்-விசாரணை செய்ய 4 விஷேட பொலிஸ் குழுக்கள்

(UTV|COLOMBO)-வத்தளை, ஹேகித்த பகுதியில் நேற்று (13) மபலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 4 விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

சி.சி.ரி.வி காணொளிகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹேகித்த அய்யன் சபரிமலை கோவிலுக்கு அருகில் நேற்று மாலை 3.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்திருந்தனர்.

மோட்டார் வாகனத்தில் வந்த குழு ஒன்று இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் கொட்டஞ்சேனை, ஜிந்துபிட்டி பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஸ்டீவன் ராஜேந்திரன் எனும் சார்ல்ஸ் என்பவரும் 38 வயதுடைய சுப்பையா மதிவானன் என்பவரும் உயிரிழந்திருந்தனர்.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் இரு குழுக்கள் இடையில் உள்ள பிரச்சினையின் காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எனவே இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள 4 விஷேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

 

Related posts

வர்த்தக ஈடுபாட்டு சுட்டெண் பட்டியலில் இலங்கை 11 இடங்கள் முன்னேற்றம்

நிரபராதி முஸ்லிம்களை விடுவிக்க முஸ்லிம் எம்பிக்கள் வலியுறுத்து!

நாட்டில் 2054 பேருக்கு கொரோனா