சூடான செய்திகள் 1

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி மகிழ்ச்சி

(UTV|COLOMBO)-வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக்கப்படுகின்றன.

இது தொடர்பில் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் பேசப்பட்டதாக அதன் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

செயலணியின் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்றது.

நீண்ட காலமாக இடம்பெற்று வந்த யுத்தத்தினால் பின்னடைவுக்குள்ளாகியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை துரிதப்படுத்தி அம்மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த விசேட ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டது.

கடந்த இரண்டு மாத காலமாக இச்செயலணி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிகவும் மும்முரமாக செயற்பட்டு வருவதுடன், அந்த நடவடிக்கைகள் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதையிட்டு ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்ததாக வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதன் பொறுப்பை சபாநாயகர் ஏற்க வேண்டும்

பாடசாலை மாணவி போல் நடித்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் தம்பதி கைது

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் வைத்தியசாலையில் அனுமதி