வகைப்படுத்தப்படாத

வடக்கில் பன்றிக்காய்ச்சல்

(UDHAYAM, COLOMBO) – வட மாகாணத்தில் H1N1 எனப்படும் இன்புளுவன்ஸா நோய்க்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 400 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து அதிகளவான நோயாளர்கள் பன்றிக்காய்ச்சலால் இனங்காணப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் 244 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றார்கள்.  இரத்தமாதிரி பரிசோதனையின் மூலம் 65 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

Census 2020: Trump drops plan for controversial citizenship question

அனர்த்தத்திற்கு உள்ளாகும் பகுதிகளை வரைபடமாக்கும் பணிகள் காலியில் ஆரம்பம்

பிரதமராக ரணிலே பதவி வகிப்பார்