உலகம்

வட கொரியாவில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம்

(UTV|வட கொரியா) – வட கொரியாவில் முதல் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்குத் தப்பித்துச் சென்ற ஒரு நபர், கடந்த வாரம் வட கொரியா திரும்பியதாகவும் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அவசர கூட்டத்தை நடத்திய வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன், எல்லை நகரத்தை பொது முடக்கத்தை அறிவித்துள்ளார்.

மேலும் வைரசைக் கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை உடனே செய்யுமாறு வட கொரிய தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வட கொரியா வெற்றி பெற்றுள்ளது என வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புக்கர் பரிசு பெற்ற பிரிட்டன் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் காலமானார்

அடுக்குமாடி இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி

வீடு வாங்கினால் மனைவி இலவசம் – சர்ச்சைக்குள்ளான விளம்பரம்