விளையாட்டு

லீவிஸ் ஹாமில்டனுக்கு சாம்பியன் பட்டம்

(UTV |  பார்முலா) – துஸ்கான் கிராண்ட் பிரீயில் மெர்சிடெஸ் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார். இது அவரின் 90-வது கிராண்ட் பிரீ வெற்றியாகும்.

பார்முலா 1 கார்பந்தயத்தில் துஸ்கான் கிராண்ட் பிரீ இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. முதன்முறையாக நடத்தப்படும் இந்த போட்டியில் இங்கிலாந்து வீரரும், மெர்சிடெஸ் அணியைச் சேர்ந்தவருமான லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார். பார்முலா 1 கார்பந்தயத்தில் லீவிஸ் ஹாமில்டனின் 90-வது வெற்றி இதுவாகும்.

லீவிஸ் ஹாமில்டன் பந்தய தூரத்தை 2:19:35.060 மணி நேரத்தில் கடந்து முதல் இடம் பிடித்தார். மற்றொரு மெர்சிடெஸ் வீரர் வால்டரி போட்டாஸ் 4.8880 வினாடிகளில் பின் தங்கி 2-வது இடம் பிடித்தார். ரெட் புல் அணியின் ஆல்பன் 8.064 வினாடிகளில் பின்தங்கி 3-வது இடம் பிடித்தார்.

Related posts

இத்தாலி இறுதிப் போட்டிக்குள்

மீண்டும் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் – தனுஷ்க குணதிலக்க.

சேவாக்-டோனிக்கு விடுத்த கட்டளை…