உள்நாடு

 லிட்ரோ எரிவாயு புதிய விலை

(UTV | கொழும்பு) –  லிட்ரோ எரிவாயு புதிய விலை

12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பை இன்று (04) நள்ளிரவு முதல் மேற்கொள்ள லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 3738 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு 402 ரூபாவால் குறைக்கப்படுகிறது. எனவே அதன் புதிய விலை 1,502 ரூபா ஆகும்.

2.3 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு 183 ரூபாவால் குறைக்கப்படுவதால் அதன்ப புதிய விலை 700 ரூபா ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் உள்நாட்டு எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

மேலும், உலக சந்தையில் எரிவாயு விலை வீழ்ச்சி மற்றும் ரூபாயின் மதிப்பு வலுவடைந்தமை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விலை குறைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

புதிய விலைகள் இன்று அறிவிக்கப்படும் எனவும், வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலை குறைப்பு இதுவாகும் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மியன்மாரிலிருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

மூன்று ஜப்பான் போர் கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

தமிழ் மக்களை அழித்து தமிழ்த் தேசியம் வளர்க்கப்படுகிறது – அங்கஜன்

editor