உள்நாடு

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உடன் அமுலுக்கு வரும் வகையில் விலை அதிகரிப்புக்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளது.

இந்நிலையில், 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் காஸ் சிலிண்டரின் விலை 363 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் புதிய விலை 1,856 ரூபாயாகும்.

இதேவேளை, ஐந்து கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், அந்த சிலிண்டரின் புதிய விலை 743 ரூபாயாகும். இதுதொடர்பில், இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் லசந்த அழகியவண்ண அறிவித்தார்.

Related posts

இத்தாலியில் இலங்கையர் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை

இலங்கை பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது

editor

சுதந்திர தின பிரதான வைபவத்தினை புறக்கணிக்கிறார் பேராயர் மெல்கம் ஆண்டகை