விளையாட்டு

லசித் மாலிங்க, உள்வாங்கப்பட, இந்திய அணியில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு

(UTV|COLOMBO)-எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் மலிங்க, சந்திமால் மற்றும் குணதிலக்க ஆகியோர் உள்ளவாங்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணியில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது

அஞ்சலோ மெத்தியூஸ் தலமையிலான 16 பேர்களை கொண்ட இலங்கை அணிக் குழாமில் குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டீஸ், உபுல் தரங்க, தினேஷ் சந்திமால், தனுஷ்க குணதிலக்க, திஸர பெரோ, தசூன் சானக்க, தனஞ்சய டிசில்வா, அகில தனஞ்சய, தில்றூவான் பெரேரா, அமலி அப்பன்ஷோ, கசூன் ராஜித, சுரங்க லக்மால், துஷ்மந்த சமிரா மற்றும் லசித் மலிங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதற்கும் மேலதிக வீரர்களாக நிரோஷன் திக்வெல்ல, மதுசங்க, லக்ஷான் சந்தகான், நுவான் பிரதீப் மற்றும் செஹான் ஜெயசூரிய ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை ஆசிய கிண்ணப் போட்டிகளில் களமிறங்கவுள்ள இந்திய அணியையும் இந்திய கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப் போட்டித் தொடரில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதிரடி ஆட்டக்காரரான ரோஹித் சர்மா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

ரோஹித் சர்மா தலமையிலான இந்திய அணி சார்பாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல், தோனி, மனிஷ் பாண்டே, கேதர் யாதவ், அம்பாத்தி ராயிடு, ஹர்த்தீக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், சஹால், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், சர்துல் தாகூர் மற்றும் கலில் அஹமட் ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாணய சுழற்சியில் சிம்பாம்வே வெற்றி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரருக்கும் கொரோனா

எந்த பேட்டிங் வரிசையிலும் விளையாட தயார்