உள்நாடுபுகைப்படங்கள்விளையாட்டு

லசித் மலிங்கா தேடி, புகழ்பெற்ற மொஹம்மெட் பைனாஸ் யார்?

கிறிக்கெட் உலகின் ஜாம்பவானும், பிரபல கிறிக்கெட் வீரருமான லசித் மாலிங்க தனது முகநூலில் அண்மையில் பதிவொன்றை இட்டிருந்தார்.

அதில் இளம் வீரர் ஒருவரின் திறமையான பந்துவீச்சு காணொளியொன்றை பதிவு செய்து  இவர் பற்றிய தகவலை எனக்கு தருமாறும், திறமையாக பந்துவீசக்கூடிய இவருக்கு எதிர்காலத்தில் கிரிக்கெட்டில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் பாராட்டி அந்த காணொளியை பதிவு செய்ததுடன், மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கொண்டு சமூக ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்ட பந்துவீச்சாளராகவும் காணப்பட்டார்.

இது தொடர்பில் எமது யூ டீவி செய்திப்பிரிவினர் (UTV NEWS ) ஆராய்ந்த போது, குறித்த சிறுவன் அநுராதபுரம், ஹொரவாபொத்தான, பத்தாவ என்ற பிரதேசத்தினைச் சேர்ந்த மொஹம்மட் பழீல் மற்றும் மர்சூக்கா ஆகியோரின் மூன்றாவது புதல்வரான மொஹம்மட் பைனாஸ் என்று நாம் அடையாளம் கண்டோம்,

வீரச்சோலை முஸ்லிம் வித்தியாலத்தில் கல்வி கற்றுவருகின்ற இவர்  கிறிக்கெட் விளையாட்டில் ஆர்வமானவர் எனவும் சிறுவயதிலிருந்து திறமையாக விளையாடக்கூடிய நபராக இருந்துவருகின்றார். ஹொரவாபொத்தான பிரதேசத்திலுள்ள ஹமாஸ் ரோயல் விளையாட்டுக்கழகத்தினூடாக விளையாடிவருவதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த இளம் வீரர் பைனாஸின் திறமையை வாழ்த்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேரடியாக இளம் வீரரின் இல்லத்திற்கு சென்று வாழ்த்தியதுடன் பண பரிசில்களையும் வழங்கிவைத்தார்.  மேலும், அப்பிரதேசத்திலுள்ள மைதான பிரச்சினைகள் தொடர்பிலும் விளையாட்டுக்கழகங்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைத்தனர்

மேலும், குறித்த இளம் வீரர் பைனாசுடன் கிறிக்கெட் வீரர் லசித் மாலிங்க உரையாடியதுடன் தற்போது அவுஸ்ரெலியாவில் இருப்பதாகவும், நாடு திரும்பியதும் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

FULL VIDEO:

 

Related posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெளியேறல் பகுதிக்கு பூட்டு

காலி வீதியில் விசேட போக்குவரத்து திட்டம்

கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவுக்கு ஐவர் பலி